மணமகலயம - அடசய பததரமம

Read full text
Authors: Shanlax Journals
Cited by: 0

Abstract

மணிமேகலையில் 30 காதைகளில் 11வது காதையாகப் பாத்திரம் பெற்றகாதை இடம்பெற்றுள்ளது. இதில் மணிமேகலை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியான அட்சயப் பாத்திரத்தைப் தன் கையில் பெற்ற செய்தி இடம்பெறுகின்றது. பௌத்த துறவியான மணிமேகலை தன் தோழிசுதமதியுடன் நந்தவனத்தில் மலர்கொய்யும் போது, அங்கு அவனைத்துரத்தி வந்த உதயகுமாரன் எனும் இளவரசனிடமிருந்து தப்பும் பொருட்டு ஒரு பளிங்கு அறையில் புகுகின்றாள். அங்கு இந்திராவிழாவினைக் காணவந்த மணிமேகலா தெய்வம் அவள் துயர் துடைக்க அவளை மயக்கி மணி பல்லவத்தீவிற்கு கொண்டு செல்கின்றது. திரும்பி வந்து தோழிசுதமதியிடம் மணிமேகலை மணிபல்லவத்தில் இருக்கிறாள் எனவும், அங்குத் தன் பழம் பிறப்பை அறிந்து ஏழு நாட்களில் திரும்பி வருவாள் எனவும் உரைக்கின்றது. மணிமேகலையின் வாழ்வில் மணிபல்லவத் தீவுப்பயணம் ஒரு திருப்பு முனையாக அமைகின்றது. அத்தீவில் இருந்த பத்மப் பீடிகையை வணங்கி பழம் பிறப்பை அறிகிறாள். பின்பு அங்குத்தோன்றிய தீவதிலகையிடம் தன்னைப் பற்றிக் கூறி முன்னொரு காலத்தில் ஆபுத்திரனால் கைவிடப்பட்ட அமுதசுரபியைப் பெறுகிறாள். தீவதிலகை அவளுக்கு அறங்கள் சிலவற்றை உரைக்கிறாள் அந்த அறிவுரைகளைப் பெற்றப்பின்னர் மணிமேகலா தெய்வத்தின் உதவியுடன் அட்சயப் பாத்திரத்தோடு பும்புகாரை வந்தடைந்கின்றாள். சிறு பெண்ணாக இருந்த மணிமேகலை தன் பழம் பிறப்பை உணர்தல், அட்சயப் பாத்திரம் பெறுதல், புத்த பீடிகையை வழிபடுதல் என இளம்துறவி என்ற நிலைக்கு இப்பயணத்திற்குப் பின்னர் உயர்கின்றாள். அவளுக்கு சமூகக் கடமை அதிகரித்துள்ளதைக் இப்பகுதியில் காணலாம்.

Fields of Study & Subjects

Indian and Buddhist Studies Folklore Mythology and Literature Studies Cultural and Mythological Studies

Publication details

Journal / source
Shanlax International Journal of Arts Science and Humanities
Publication date
15 January 2026
Language
TA