எடடததக நலகளல அறம

Read full text
Authors: Shanlax Journals
Cited by: 0

Abstract

ஒரு மனிதன் ஒரு சமூகத்தில் சேர்ந்து வாழ்வதற்கும் அல்லது தனியே இருந்து தனிமனிதனாக இயங்குவதற்கும் அம்மனிதனுடைய பண்பு நலன்களை உருவாக்கும் தன்மைகள் அறம் எனப்பட்டது. இலக்கணச் செறிவும், இலக்கியச் செம்மையும் வாய்ந்த மொழி தமிழ்மொழி. இத்தமிழ்மொழி பேசும் தமிழரின் பண்பாடு மிகவும் பழமை வாய்ந்தது. மானிட இனத்தின் உயர் பண்புகளால் அமைவதே பண்பாட்டு அறிவு எனப்படுகிறது. பண்டைத் தமிழர் திருமண வாழ்வை இல்லறம் என்றனர். இல்லிலிருந்து அறம் பல புரிந்தும் இல்வாழ்வின் முடிந்த பயனாக அறத்தைப் போற்றியும் வாழ்ந்தனர் பார் போற்றும் சிறந்த அறங்களுள் ஒன்று பகுத்துண்ணல். பண்டைத் தமிழர் காதலையும், வீரத்தையும் தம்மிரு கண்களாகப் போற்றி வாழ்ந்து வந்தனர். வீரவாழ்வின் வெளிப்படையான போர்ப் பண்புகள் பிற இலக்கியங்களும் விரித்துரைக்கின்றன. பகைமை பற்றி எழும் போரிலும் அறநெறித் தவறாத பண்பாடுடையவராகப் பண்டைத் தமிழர் விளங்கினர். எனவே மனிதனின் வாழ்விற்குத் தேவையான அறக்கருத்துக்கள் அரசியல், மறம் பற்றிய கருத்து, ஈகை, கொடை, இல்லறம், விருந்தோம்பல் போன்றவற்றை தரும் களஞ்சியமாக எட்டுத் தொகை நூல்கள் திகழ்கின்றனஎன்பதில் ஐயமில்லை.

Fields of Study & Subjects

Indian and Buddhist Studies Cultural and Mythological Studies Classical Studies and Philology

Publication details

Journal / source
Shanlax International Journal of Arts Science and Humanities
Publication date
15 January 2026
Language
TA