சததர படலகளல சமகச சநதனகள

Read full text
Authors: Shanlax Journals
Cited by: 0

Abstract

தமிழகத்தில் தோன்றிய பக்திநெறி எளிய இனியவழியில் இறைமையைக் காண முற்பட்டது. ஆனால் சித்தர்நெறி சிவனைச் சிவமாகக் கண்டு தூய மெய்யறிவின் முடிவில் இறைமையைக் கண்டது. நிறைமொழி மாந்தர் என இலக்கண இலக்கியங்கள் குறிப்பிடும் இவர்கள், சமூகத்தில் வாழும் மக்கள் அனைவரும் நோயின்றி வாழ்வதற்கான - இனபத்துடன் வாழ்வதற்கான - துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிகள் பலவற்றை ஆராய்ந்து தெளிந்து மனித சமூகம் அனுபவிக்கும்படி செய்தனர். சித்தர்களுள் பெரும்பாலோர் சைவர்களாயினும், பொதுவாக இவர்கள் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்தவர்கள். மூடநம்பிக்கைக்கு இடந்தராத இவர்கள், சடங்குகளையும் சடங்குகளோடு ஒட்டிய பிராயச்த்த மந்திர தந்திர வழிபாடுகளையும் போற்றதவர்கள். தம் வாழ்க்கை அனுபவங்களாய் கண்டறிந்த உண்மைகளை மட்டும் தெளிவாக எடுத்துச் சொல்வதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். அவ்வகையில் பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர், கொங்கணர் போன்றோர்களின் பாடல்களில் காணப்படும் சமூகச் சிந்தனைகள் குறித்த செய் திகளைச் சுருக்கமாக இக்கட்டுரை ஆராய் கிறது.

Fields of Study & Subjects

Cultural and Mythological Studies Indian and Buddhist Studies South Asian Studies and Diaspora

Publication details

Journal / source
Shanlax International Journal of Arts Science and Humanities
Publication date
15 January 2026
Language
TA