மறபககம நவலல மனத நயம
Abstract
மனிதன் தனித்து நின்று எதையும் செயல்படுத்த முடியாது. ஒருரை ஒருவர் சார்ந்து தான் வாழ வேண்டும். அவ்வாறு வாழும் வாழ்க்கை முறையை நாம் சமுதாயம் என்கிறோம். சமுதாயம் என்பது பல சமூகக் குழுக்கள் முன்னேற வேண்டுமானால் சிறந்த சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும். காலம் மாற மாற சமுதாயமும் மாறும் தன்மை உடையது. இந்த மாற்றத்தால் சமுதாயத்தில் சண்டைகளும் ஏற்படுகிறது. குமரி மாவட்ட மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு பொன்னீலன் எழுதிய ஒரு மாபெரும் நாவல் மறுபக்கம். இந்நாவலில் மண்டைக்காட்டு கலவரம் கதை கருவாக உள்ளது. முக்கிய கதாபாத்திரங்களின் மனிதநேய செயல்பாடுகள் நாவலின் உயிரோட்டமாக அமைகின்றது. வெங்கடேசன், சேதுமாதவன், முத்து மற்றும் சாமிதுறை முதலியவர்களின் பங்களிப்பு நாவலில் உயிர்துடிப்பு மிக்கதாக உள்ளது. காலணி ஆட்சிக் காலத்தில் குமரிமாவட்டத்தில் கிறிஸ்தவ மதம் வேகமாக பரவிய கதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரிங்கல்தௌபே, மீட் அய்யர் ஆகிய பாதிரியார்கள் வருகையால் கடற்கரையில் உள்ள மீனவர்களுக்கிடையேயும் நாடார்களுக்கிடையேயும் கிறிஸ்தவ மதமாற்றம் ஏற்பட்டது. மத நல்லிணக்கம், அடிமை ஒழிப்பிற்கான போராட்டம், குமரிமக்கள் தாய் தமிழகத்தோடு இணைந்தது, பெண்கள் மேலாடை அணியலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அடித்தள மக்களும் சமூகத்தில் வேகமாக முன்னேற்றம் அடைந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் முன்னேறி வருவதைக் கண்ட உயர்சாதி மக்கள் பொறாமை கொண்டு அவர்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை தூண்ட முயன்றனர். கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் முன்பு போல் பயந்து போகாமல் அநீதிகளை எதிர்க்கத் தொடங்கினர். மீட் ஐயர் என்கிற கிறிஸ்தவப் பாதிரியாரால் அடிமைகளாக வாழ்ந்த மக்கள் விடுதலை அடைந்தனர். சாதி மக்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் வளர ஆரம்பித்தது. சாதியின் வரைமுறை காரணமாக தூய்மை, தீட்டு என வரையறை செய்யப்பட்டது. மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையில் ஏற்படும் மோதல்களை அடிநிலையாக கொண்டு மறுபக்கம் நாவல் அமைகிறது. இந்நாவலில் வரும் பல பாத்திரங்கள் இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்கா இடத்தைப் பெற்றுள்ளன. உதாரணமாக மார்ஷல் நேசமணி, அய்யா வைகுண்டர், மீட் ஐயர் போன்ற பாத்திரங்கள் மனித நேயத்தோடு போராடினர். முக்கிய பாத்திரங்களின் மனித நேய செயல்பாடுகள், நாம் பிற மதங்களை கேலி செய்யாதிருத்தல், தன்னுடைய மதத்தை உயர்வாக பேசாதிருத்தல் போன்ற மத நல்லிணக்க கருத்துக்கள், அடிமைத் தனத்திலிருந்தும் சமூக ஒடுக்க முறைகளிலிருந்தும் விடுதலை அடைதல், விருந்தோம்பலின் முக்கியத்துவம் போன்ற மனிதநேயம் நாவலில் அதிகம் இடம் பெற்றுள்ளது. மனித நேயம் குறித்த பல நுண்ணிய கருத்துக்களை மறுபக்கம் நாவல் வழி நின்று ஆராய்ந்து எடுத்துரைப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.
Fields of Study & Subjects
Literature: history
themes
analysis
Themes in Literature Analysis
Literary Analysis and Cultural Studies
Publication details
- Journal / source
- Shanlax International Journal of Arts Science and Humanities
- Publication date
- 15 January 2026
- Language
- TA