Decorative patterns that emerge through pathupattu
Abstract
பத்துப்பாட்டு ஒரு பண்பாட்டுச் சுரங்கமாகும். வீரயுக காலத்தின் நுனியில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்துள்ளது. அவர்களது கலை, பண்பாடு, பொருளாதார நிலை, பழக்கவழக்கம் போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. நமது பண்பாட்டின் அலங்கார முறைகளை கோயில் சிற்பங்களும் தொல்லியல் ஆய்வுகளில் வெளிப்படும் அணிகலன்களும் காட்டுகின்றன. மகளிர் தம்மை அழகுபடுத்திக் கொள்ள செங்கழுநீர் இதழ்களைக் கொண்டு மாலை கட்டியுள்ளனர். பொன்னாலான அணிகலன்களை அணிந்துள்ளனர். கூந்தலுக்கு நறும்புகை ஊட்டியுள்ளனர். கத்தூரி, சந்தனம் போன்ற மணப்பொருள்களை அரைத்துப் பூசியுள்ளனர். மெல்லிய நூலால் செய்த புடவைகளுக்கு மணப்புகை ஊட்டியுள்ளனர். சங்க காலத்தில் தழையுடை, மரவுரி, பருத்தி மற்றும் பட்டால் நெய்யப்பட்ட ஆடைகளை மக்கள் உடுத்தியுள்ளனர். ஆண்கள் கால்களில் கழல் அணிந்துள்ளனர். ஆண்களது அலங்காரமும் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவ்வகையான அலங்கார முறைகள் குறித்து பத்துப்பாட்டின் வழி ஆராய்வதாக இவ்வத்தியாயம் அமைகின்றது.
Fields of Study & Subjects
Cultural and Mythological Studies
Indian and Buddhist Studies
Crafts
Textile
and Design
Publication details
- Journal / source
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Publication date
- 1 January 2026
- Language
- TA
- Document type
- Book chapter