A natural expanse of mountain range
Abstract
உலகில் வாழும் எண்ணற்ற உயிர்களின் தாயாக இயற்கை விளங்கி வருகிறது. இயற்கை பிற உயிர்களின் வாழ்விற்கான பங்களிப்பைச் செய்து வருகிறது. பழந்தமிழர் இயற்கையை நன்கு கூர்ந்து கவனித்து தம் கருத்துகளை இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததாலே இவ்வாறு உணர முடியும் என்பதை அறியலாம். நீர் பயன்பாடு குறைவாக இருந்த காலத்திலே நீரை செல்வமாகக் கருதியிருந்தனர். நீரின் அடிப்படையான மழையை மிகுதியான இடங்களிலெல்லாம் பாடல்களில் பதிவு செய்துள்ளனர். அருவியின் அழகில் ஒன்றிப்போயினர். நீர்நிலைகளை இடத்திற்கேற்பவும் அதனின் தன்மைக் கேற்பவும் பல்வேறு பெயர்களிட்டுக் குறிப்பிட்டு இருக்கின்றனர். நீரை மிக உயர்வாகவும், நீர் நிலைகளில் இயற்கைப் பெருவெளியில் தெய்வம் உறையும் என்பது தமிழரின் எண்ணங்களாக இருந்திருக்கின்றன. இயற்கையின் தன்மைகளை உள்ளதை உள்ளவாறே குறிப்பிட்டு இருக்கின்றனர். மலைகளை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக பழந்தமிழர் எண்ணியதாக அறியமுடிகிறது. பழந்தமிழர் இயற்கையோடு இரண்டற கலந்த வாழ்வினை மேற்கொண்டதை எண்ணிச் செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
Fields of Study & Subjects
Ecocriticism and Environmental Literature
Literary Analysis and Cultural Studies
Poetry Analysis and Criticism
Publication details
- Journal / source
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Publication date
- 1 January 2026
- Language
- TA
- Document type
- Book chapter