Kabilarum Purananurum
Abstract
பழந்தமிழ் நூல்களில் தமிழரின் பண்பாட்டுக் கருவூலமாகவும் வரலாற்றுப் புதையலாகவும்அமைந்திருப்பது புறநானூறு என்னும் தொகை நூல். பண்டைய தமிழ்மக்களின் ஒழுக்கங்களையும் பழக்க வழக்கங்களையும அறிந்து கொள்ளும் பெட்டகமாகப் புறநானூறு திகழ்கிறது.தமிழ் மன்னர்கள் அக்காலத்தில் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டு வாழந்தமையாலும் வீரம் கொடை கல்வி நல்லொழுக்கம் போன்ற உயரிய பண்புகளைப் பின்பற்றியமையாலும் தமிழர்களின் வரலாறு இன்றளவும் போற்றப்படுகிறது. சங்க இலக்கிய அரசர்கள் மன்னர்கள் பாணர்கள் புலவர்கள் வணிகர்கள் என அனைவரையும் பற்றி அறிந்து கொள்ள உதவும் கருத்துச்சுரங்கம் எனலாம்.புறநானூறு தமிழ் மக்களின் சமுதாய அரசியல் வாழவையும் மக்களின் பழக்கவழக்கம் மற்றும் பண்பாட்டினையும் நவிலும் நூலகம் அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை அவனை அவர் பாடியது என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.தமிழகத்தின் பண்டைய வரலாற்றை அறிய வரலாற்று மூலங்கள் குறைந்த நிலையில் வரலாற்றுப் பெட்டகமாகப் புறநானூறு விளங்குகிறது. இங்ஙனம் நோக்குங்கால் இக்கட்டுரை புறநானூற்றுப் பாடல்களின் வழி கபிலருக்கம் புறநானூற்றுக்கும் உள்ள தொடர்பினை ஆராய முற்படுகிறது எனலாம்.
Fields of Study & Subjects
Indian and Buddhist Studies
Cultural and Mythological Studies
Classical Studies and Philology
Publication details
- Journal / source
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Publication date
- 1 January 2026
- Language
- TA
- Document type
- Book chapter